கேளிக்கை என்ற ஒரு தளத்தில் நின்று சினிமாவின் எண்ணற்ற சாத்தியக் கூறுகளைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்த்திரை உயிர்ப்போடு வளர சக்கரவர்த்தியின் தீர்க்கமான கட்டுரைகள் உரமாக அமையும்.
——– தியடோர் பாஸ்கரன்
ஒரே சமயத்தில் திரைப்பட இயக்குனராகவும் ஆசிரியராகவும் ஆய்வாளராகவும் திகழ்கிற சக்கரவர்த்தி கடந்த முப்பதாண்டுகளில் எழுதிய தமிழ்க் கட்டுரைகளின் இந்தத் தொகுப்பு சீரிய வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிதும் பயன்படும் அரியதொரு நூலாகும்.
—— சுந்தர் காளி
இக்கட்டுரைகள் படிக்கவேண்டிய கட்டுரைகள் என்பதைவிட பயில வேண்டிய கட்டுரைகள் பயின்று விவாதிக்க வேண்டிய கட்டுரைகள் என்று சொன்னால் மிகையாகாது.
– ராஜன் குறை
சினிமாக் கோட்பாடுகளைத் தமிழுலகத்திற்கு அறிமுகப் படுத்திய முன்னோடியான ஆசான் சக்கரவர்த்தியவர்களின் இக்கட்டுரைகள் ஊடகத் துறை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்களுக்கு அவர் நல்கியிருக்கும் நிகரில்லாத கொடை.
– ஸ்வர்ணவேல்
Author(s): Venkatesh Chakkravarthy
Publisher: Vanavil Publications
Reviews
There are no reviews yet.