இந்த நூல் வேலை வாய்ப்புக்குரிய அறிவையும் தகவல்களையும் தருவதோடு சாம்பிக்கிடப்பவர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டி எழுச்சியோடு நிமிர்ந்து நிற்கச் செய்கிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் தொடர்பு கொண்டு தேட வேண்டிய தேடல்களை ஓரே இடத்தில் இந்நூலில் தரப்பட்டிருக்கிறது. வழக்கமான தொழில்படிப்புகள் தவிர வேறு படிப்புகளுக்கு எதிர்காலம் எதுவும் இல்லை என்ற மாயையை இந்நூல் தகர்த்துள்ளது. இளைஞர்களின் தனித்திறமைக்கேற்ப தொழில் சார்ந்த பல்வேறு படிப்புகள் படிக்க இந்தியாவில்,அதுவும் நமது மாநிலத்திலேயே வாய்ப்புகள் உள்ளது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம். இளைய சமுதாயம் மட்டுமின்றி ஒய்வு பெற்றோர், வீட்டுப்பெண்கள், சுயதொழில்கள் ஆர்வலர்கள் ஆகியோருக்கும் மிகவும் பயனுள்ள புத்தகமாகும்.
Author(s): Dr. M. Lenin
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.