வாஸ்து சாஸ்திரம் நம் நாட்டின் அரும் பெரும் சொத்துகளில் ஒன்று. இன்று அது பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. வாஸ்து சாஸ்திரத்தின்படி தங்கள் இருப்பிடங்களை , வியாபார நிறுவனங்களை அமைத்துக் கொள்பவர்களுக்கு மன அமைதியையும் அழியாத செல்வத்தையும் இந்த சாஸ்திரம் வாரி வாரி வழங்குகிறது.
இன்று வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் பலன் சொல்வதாகக் கூறி இந்த அறிய கலையை பலரும் தவறாகப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கத் தொடங்கி விட்டனர். உண்மையிலேயே வாஸ்து சாஸ்திரம் நம்பக் கூடியதா? இதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? இதைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி உயர்ந்தவர்கள் உண்டா என்று அடுக்கடுக்கான சந்தேகங்கள் உங்கள் மனதில் தோன்றக் கூடும்.
இந்தப் புத்தகம் உங்களுடைய சந்தேகங்களுக்கெல்லாம் விடை அளிப்பதுபோல மிகவும் எளிய நடையில் யாருடைய உதவியும் இன்றியே நீங்கள் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவி புரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இதைப் படித்துப் பார்த்தவுடனேயே தெரிந்துகொள்வீர்கள்.
இந்நூலின் ஆசிரியர் இராதாக்ருஷ்ண சர்மா அவர்கள் புராணங்களிலிருந்தும், இதிகாசத்திலிருந்தும் , வரலாற்றிலிருந்தும் தகுந்த சான்றுகள் காட்டி வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி விளக்கியுள்ளார்கள். இது சம்பந்தமாக அவர்கள் செய்த ஆராய்ச்சிகளின் பலனே இந்த அரிய புத்தகம்.
Author(s): Radhakrishnan Sharma
Publisher: Vanavil Publications
Reviews
There are no reviews yet.