காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் பலதரப்பு மக்களையும் ஒன்றாக இணைத்துப் பார்க்கக்கூடிய பார்வை இந்திய வரலாற்றில், குறிப்பாக சென்ற நூற்றாண்டு வரலாற்றில் காந்தியின் அளவுக்கு யாரிடமும் இல்லை. இந்தியாவை எந்த ஒரு குறிப்பிட்ட மக்களுக்கான தேசமாகவும் அவர் பார்க்க வில்லை. பல்வேறு சிறுபான்மை மக்களின் தொகுதியாகத் தான் அவர் இந்தியாவைப் பார்க்கிறார். இந்துக்களையும்கூட தலித்துகள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களை உள்ளடக்கிய சிறுபான்மை தொகுப்பாகத்தான் அவர் கருதியிருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் அவர் நடத்திய போராட்டங்களில் அவருடன் இருந்தவர்கள் குஜராத்திகள்,முஸ்லிம்கள்,தமிழர்கள். பெரிய அளவில் தலித் மக்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு மக்கள் சேர்ந்த தொகுதிதான் என்னும் கருத்து அவருக்கு அப்போதே உருவாகிறது.
Author(s): A. Marx
Publisher: Vanavil Publications
Reviews
There are no reviews yet.