நாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள். ‘இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?’ என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ப் ஹிட்லர் ! பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனை கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரமிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர் ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் போவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம்.எந்தச் சூழலில் ஒரு சர்வாதிகாரிக்கான தேவை உருவானது என்ற பின்னணியை ஆராய்வதில் தொடங்கி, ஹிட்லரின் பொது, தனிப்பட்ட வாழ்க்கையை இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டம் வரை சொல்லப்படாத நிகழ்வுகளுடன் விவரித்திருப்பதே இந்நூலின் சிறப்பு.
Author(s): Mugil
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.