Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
“பயணம் (இல்லை) பணயம்”: உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக அமேசான் கிண்டில் “பென் டூ பப்ளிஸ் 2019” போட்டிக்காக எழுதப்பட்டது. அப்போட்டியில் வெற்றியும் பெற்றது. இந்தியாவில் இருந்து மூன்று மாதம் ப்ரான்ஸ் நாட்டிற்கு வேலைத் தொடர்பாக சென்றவர்களின் இரு நாட்கள் சாலை வழி பயணம்தான் கதைக்களம். கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் அரசியல், கொஞ்சம் பயணம் என்று கதையை விறுவிறுப்பாக ஆசிரியர் அமைத்துள்ளார்.
“பாண்டியப் பேரரசு”: அண்ணா சிறுவர் கதை போட்டி 2020-ல் சிறப்பு பரிசு பெற்ற கதை. தமிழர் வரலாறு, உணவு அரசியல், எதிர்காலம் போன்றவைகளை தொட்டு ஆசிரியர் விறுவிறுப்பாக கதையை அமைத்துள்ளார். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்குமான கதை.
“வா தமிழா! பொருளாதாரம் பயில்வோம்…”: வெளியிட்ட ஒரே வருடத்தில் கிட்டத்தட்ட 3,000 பேர் படித்துள்ள புத்தகம். அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னாடி பொருளாதார காரணிகள் உண்டு. அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கிறது. பொருளாதாரம் அரசியலை தீர்மானிக்கிறது. இந்த தொடர்பினை ஆசிரியர் நாம் தினசரி பார்க்கும் சம்பவங்களை கொண்டே விளக்குகிறார். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் பின்னணியில் உள்ள பொருளாதார கோட்பாடுகளை விரிவாக விளக்கி, நமக்கு எந்த பொருளாதார கோட்பாடு உகந்தது என்பதை நம் சிந்தனைக்கே ஆசிரியர் விட்டுவிடுகிறார். அனைத்து சம்பவங்களையும் பொருளாதார பின்னணியில் பாருங்கள் என்று கூறும் ஆசிரியர் அதை எப்படி பார்க்க வேண்டும் என்பதை விளக்குகிறது இப்புத்தகம்.
“உரிமைகளின் காவலன்…”: அரசியல் என்றால் என்ன? நமக்கான அரசியலை எப்படி தேர்தெடுப்பது? நம்மை சுற்றி நடக்கும் அரசியல் என்ன? போன்ற 101 கேள்விகளுக்கு விரிவாகவும், தெளிவாகவும் பதிலளிக்கிறது இப்புத்தகம். வரலாறு, சமகால அரசியல், தமிழர் எதிர்காலம் என அனைத்தையும் ஒரு புத்தகத்தில் அடக்கி தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுப்பட விரும்புபவர்களுக்கு ஒரு கையேடாக இப்புத்தகம் உள்ளது. பொது கருத்துகளை உடைத்து ஒரு நிகழ்வின் உண்மைத்தன்மையை எப்படி பகத்தறியலாம் என்பதற்கும் இப்புத்தகத்தை ஒருவர் படிக்க வேண்டும்.
Reviews
There are no reviews yet.