My Space
Shop
Home
Cart
Recently Viewed

அது மட்டும் ரகசியம்

104.00

Save: 11.00 (9.6%)

Buy Now
ISBN: 9789382578789
Availability: In Stock

பட்டுக்கோட்டை பிரபாகர், மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம்.

1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மனப்பாடம். ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்த அவருடைய ‘தொட்டால் தொடரும்’ ‘கனவுகள் இலவசம்’ ஆகிய கதைகள் இன்றும் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்படுபவை.

அன்றிலிருந்து இன்று வரையிலும் தனது துள்ளலான நடை மற்றும் வசீகரமான கதை சொல்லும் முறையால் அடுத்தடுத்த தலைமுறை வாசகர்களையும் வென்று நூற்றுக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், தொடர்கதைகள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என்று எழுத்தின் அத்தனைத் தளங்களிலும் தனது முத்திரையைத் தொடர்ந்து பதித்து வரும் பட்டுக்கோட்டை பிரபாகரின் புகழ்பெற்ற நாவல்களுள் ஒன்று “அது மட்டும் ரகசியம்”

“அது மட்டும் ரகசியம்” ஒரு “SEAT EDGE THRILLER” அனிதா ஒரு திரைப்படப் பின்னணி பாடகி. அழகான குரல், பண்பான கணவன், நிறைவான செல்வம் இப்படி ஒரு குறையும் இல்லாத வாழ்க்கையில் ஒரு சம்பவம் அவளின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றுகிறது… அது என்னவென்றால் அது மட்டும் ரகசியம்.

Author(s): Pattukottai Prabhakar

Publisher: Vanavil Publications

Reviews

There are no reviews yet.

Be the first to review “அது மட்டும் ரகசியம்”
Back to Top

FLAT 10% OFF

On all books.
No Coupon code Required
SHOP NOW
* Terms & Conditions Apply
close-link
Product has been added to your cart