இந்தக் கணத்தில் உங்களிடம் இருக்கிற அல்லது இல்லாமல் இருக்கிற திறமைகளை இதைப் படித்ததும் உங்களுக்குப் பயன்படக்கூடிய விதத்தில் உருவாக்கி, மெருகேற்றிக் கொடுக்கும் உதவியாளனாக இது செயல்படும்.உங்களுக்கு இதழியல் துறையில் இந்தக் கணம்வரை எதுவுமே தெரியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை. எவ்வளவோ காலம் முட்டிமோதி முன்னுக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டு இருப்பவராகவும் நீங்கள் இருக்கலாம். அதனாலும் பாதகமில்லை. ஆக நீங்கள் யாராக இருந்தாலும் இதழியலில் உங்களுக்கு விருப்பமிருந்து இதை உங்கள் வாழ்க்கை முறையாக அமைத்துக் கொள்ள நீங்கள் எண்ணினால் இந்தப் புத்தகம் உங்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும்.தொழில் இரகசியம் என்ற பெயரில் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று காக்கப்படும் விசயங்களில் இதழியல் பணியும் ஒன்று.
Author(s): Dr. M. Lenin
Publisher: Vanavil Publications
Reviews
There are no reviews yet.