Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
ஆங்கிலம் தெரியாமல் களத்தில் இறங்கிய முதல் தலைமுறை பட்டதாரியின் மனநிலை எப்படியானதாக இருக்கும்?
“எழுத்துத் தேர்வுகளை எழுதுவதற்கு பயம் இருக்கும்…”
“நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்ள மிரட்சியாக இருக்கும்…”
“தன்னம்பிக்கை சுத்தமாகத் துடைத்து எறியப் பட்டிருக்கும்…”
இந்த மனநிலைகள் எனக்கும் இருந்தது. இன்று பெரும் பதவிக்கு வந்த பின்பு நான் கடந்து வந்த பாதையின் தடைகளை வெற்றிக் கொண்டதை எளிதாக அறிவுரைகளாக உங்களுக்குக் கூறிவிட முடியும். பலரும் வெற்றி பெற்ற பின்பு அறிவுரைகளைத்தான் அள்ளித் தெளிக்கிறார்கள். ஆனால், அன்றைய கடின சூழ்நிலையில், குழம்பிய மனநிலையில் எந்த தடுமாற்றத்துடன் ஒரு முடிவை எடுத்தேன் என்பதனை விரிவாக விளக்கினால் முதல் தலைமுறையாக அலுவலகப் பணிக்குச் செல்பவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறேன். அதனால் என் அனுபவத்தை அறிவுரையாக வழங்காமல், அனுபவத்தை அப்படியே தங்களுக்குக் கடத்திட இப்புத்தகத்தில் முயன்றுள்ளேன்.
Reviews
There are no reviews yet.