Author(s): P. C. Balasingh
Publisher: Yaali Pathippagam
பணம், பதவி, பட்டம் என பலவிதங்களில் ஒருவருக்கு மரியாதையும், புகழும், செருக்கும் வந்து சேரும். இந்த அடுக்கில் அறிவாளிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர்களை தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிரட்சி உண்டாகும், நெருங்கிச் செல்ல தயக்கம் உண்டாகும், ஒருவித தாழ்வு மனப்பான்மை உண்டாகும். ஆனால், இங்கே யாருக்கும் அனைத்தும் தெரிந்திருக்காது என்ற புரிதல் ஏற்பட்டுவிட்டால் அனைத்து தடைகளும் உடைந்து மனிதர்களை எளிதாக சென்று அடையலாம்.
“கற்றது கையளவு கல்லாதது உலகளவு” என்ற வரிகள் நம்மை தரையில் நிறுத்தும் அதே வேளையில் எதிரில் இருப்பவரையும் தரையில் நிறுத்தி சமத்தளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உதித்த கட்டுரைகள்தான் “அறிந்ததும், அறியாததும்”. Future Bees வார இதழில் தொடர்ந்து வந்த கட்டுரைகளை இப்புத்தகத்தில் தொகுத்துள்ளேன்.
Reviews
There are no reviews yet.