போதும்… மாவீரன் நெப்போலியன் அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்தார் தெரியுமா… செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க அதிபர் ஆனாரே ஆபிரகாம் லிங்கன்…எழுமின் விழுமின் என்றாரே விவேகானந்தர்…என்பதெல்லாம் போதும்! நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கென்றே நெப்போலியனும் அலெக்ஸாண்டரும் மற்றும் பல முன்னோர்களும் இத்தனைக் காலம் மூச்சுமுட்ட உழைத்தது போதும். இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள். அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டி மோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்து, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம் இதில் நமக்குத் தெரிந்த சாதனையாளர்களின் தெரியாத பக்கங்களும் உண்டு. நாம் அறிந்திராத மனிதர்களின் அற்புதப் பக்கங்களும் உண்டு. அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த புத்தகம். ஆனந்த விகடனில் வெளியான சூப்பர்ஹிட் தொடரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு எழுத்தாளர் முகில், அச்சு ஊடகம், காட்சி ஊடகம், தொலைக்காட்சி, சினிமா ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம், யூதர்கள், ஜெங்கிஸ்கான்,கிளியோபாட்ரா,ஹிட்லர், கிறுக்கு ராஜாக்களின் கதை, பயணச் சரித்திரம், உணவு சரித்திரம், நீ இன்றி அமையாது, வெளிச்சத்தின் நிறம் கருப்பு, ஒலிம்பிக் டைரி குறிப்புகள், திறந்திடு சீஸேம், சந்திரபாபு,எம்.ஆர்.ராதா என்று தமிழில் முக்கியமான நூல்களைப் படைத்திருக்கிறார்.
Author(s): Mugil
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.