இதைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் நேற்று இருந்த மனிதராய் நிச்சயமாக நாளைக்கு இருக்கப் போவதில்லை. நீங்கள் எப்படி இவ்வாறு அடியோடு மாறிப் போய்விட்டீர்கள் என்பதை உங்கள் சுற்றமும் நட்பும் வியப்போடு பார்க்கத்தான் போகிறது. இந்த வரவேற்கத்தக்க மாற்றம் உங்கள் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போட இருக்கிறது. இதைத்தானே நீங்களும் விரும்பினீர்கள்? முற்றிலும் புதியவராய்… வெற்றியாளராய்… சாதனைகள் பலவற்றைப் படைப்பவராய் ஆகப் போகும் உங்களுக்கு எங்களது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.இது வேண்டுமா? இங்கே கிடைக்கும். அதை அடைவதற்கு இதுதான் வழி. இப்படித் தெளிவாக உங்களைக் கையைப் பிடித்து அழைத்துப் போகிற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் முன் உங்களுக்கு ஓர் அன்பான எச்சரிக்கை.புதியவராய்… வெற்றியாளராய்… மாற வேண்டும் என்ற ஆவல் உங்களுக்குள் இருக்கும். ஒரு குறிப்பேடும் பேனாவும் மட்டும் இருந்தால் போதும்… உங்களை இன்னொரு புது மனிதராய் எங்களால் மாற்றிக் காட்ட முடியும் என்று சொன்னால் உங்களுக்கு அதை நம்புவதற்குக் கடினமாக இருக்கும். நீங்கள் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள சின்னச் சின்னப் பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே போதும். அது சாத்தியமாகும். அதை நீங்கள் எவ்வளவு எளிதாகச் செய்ய முடியும் என்பதும் இதில் விளக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே கொடுக்கப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுக்கள் வெறும் கற்பனை இல்லை என்பது இந்நூலின் மற்றொரு சிறப்பு.
Author(s): Dr. M. Lenin
Publisher: Sixth Sense Publications
Reviews
There are no reviews yet.